வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குதல்

இலங்கை இருண்ட நாட்களில் இருந்து மீண்டு வந்துவிட்டது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பமும் அவர்களது அடிவருடிகளும் மட்டுமே ஆட்சி செய்ததும் பொருளாதார் குழப்பங்களும் இலங்கையர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற தன்மையுமான ஆட்சி முடிவுக்கு வந்தது.

அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தையும் வலுவான பொருளாதாரதையும் உருவாக்கவும் கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாங்கள்;:

400,000 மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியது

200,000 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கி பாதுகாப்பாக வைத்திருக்க உதவியது

எரிபொருள்களின் விலை 22% குறைக்கப்பட்டது

கர்ப்பிணி பெண்களுக்கு தலா 20,000 ரூபாய் வழங்கியது

கடுமையான குற்றங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைக்கபட்டது

பொது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு 10,000 ரூபாய் ஆக அதிகாரிக்கபட்டது

ஆனால் இன்னும் நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டும் நாம் அனைவரும் தெருக்களில் அச்சமின்றி நடமாட கூடியதாகவூம் நமது குழந்தைகள் கல்வி அடிப்படை உணவு பெற கூடியதாகவும் இருக்கவேண்டும்.

பொருளாதாரம்தான் நாங்கள் செய்யும் அனைத்திற்கும் மையமாக உள்ளது. ஒரு வலுவான பொருளாதாரம் இல்லாமல் நாம் பாடசாலைகள் மருத்துவமனைகள் ஊதியங்கள் வேலைகள் பெற்றுகொடுக்க முடியாது. ஒரு வலுவான பொருளாதாரமும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளும் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவரும். அனைத்து இலங்கையர்களுக்கும் அதிகரித்த வருமானங்களை கொண்டுவரும்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க.இல் உள்ளவர்களுக்கு மட்டுமே நமது பொருளாதாரத்தினை சரிசெய்யூம் திறன் உண்டு. சர்வதேச சமூகத்தினரால் நம்பகதன்மை உள்ளவர்களாகவும் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து முதலீடு செய்து பொருளாதாரம் உயர்வடைய செய்ய ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.க யும் மட்டுமே உள்ளனர்.

நமது பொருளாதாரதினை வலுப்படுத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களுடன் இணைந்திருந்தால் மட்டுமே நாங்கள் இலங்கையர்களாக ஒரு சிறந்த எதிர்காலத்தை பெறமுடியும்.